தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் பலியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 38 பேர் பலியான சம்பவம் குறித்து பொறுப்பு டி.ஜி.பி. வெங்கட்ராமன் விளக்கம் அளித்தார். அப்போது, தவெகவினர் கேட்டதை விடவும் வசதியான இடத்தை தான் நாங்கள் கொடுத்துள்ளோம் எனவும் அனைத்து கட்சி பிரச்சாரத்திற்கும் அந்த இடத்தில் தான் அனுமதி கொடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர் என்றும் கூறினார்.

கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 38 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளதாக கூறியுள்ளார். பிரச்சாரத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை குறித்து பேசிய அவர், தவெகவினர் சொன்னது 10,000 பேர் என்றும் ஆனால் வந்தவர்களின் எண்ணிக்கை 35,000 பேராக இருந்தது எனவும் கூறினார். மதியம் 3 மணி என்ற காவல்துறை அனுமதி அளித்த நேரத்தை காட்டிலும் மாலை 7 மணிக்கு விஜய் வந்ததால் அதிக கூட்டம் ஏற்பட்டதாகவும், விஜய் பிரச்சார கூட்டத்திற்காக 12 மணியில் இருந்தே கூட்டம் கூட தொடங்கி விட்டது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: தவெக நிர்வாகி மீது கொலை வழக்கு... அதிரடி காட்டிய போலீஸ்…!
போலீசிடம் கொடுத்த மனுவில் 3 மணியில் இருந்து 10 மணி வரை என்றே குறிப்பிட்டு இருந்தார்கள் எனவும் மதியம் முதல் காத்திருந்த கூட்டமும் கலையாத நிலையில் நேரம் ஆக ஆக கூடுதல் நபர்கள் வருகை தந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: விஜய்யின் நீலாங்கரை வீட்டில் போலீசார்.. காரணம் என்ன..??