கரூர் மாவட்டம், தென்னிலை அருகே தனியார் கல்குவாரியில் இருந்து கட்டுமான தேவைக்காக எம்.சாண்ட் லோடு ஏற்றிச்சென்ற மினி லாரி கவிழ்ந்து 3 வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் கா.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தென்னிலை அருகே தனியார் கல்குவாரியில் இருந்து கட்டுமான தேவைக்காக எம்.சாண்ட் லோடு ஏற்றிக் கொண்டு மினி லாரி சென்றுள்ளது. அந்த எம்.சாண்ட் லோடு மீது 3 வடமாநில தொழிலாளர்கள் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். தென்னிலையில் இருந்து சின்னதாராபுரம் நோக்கி சென்ற பொழுது எதிர்பாராத விதமாக லாரி கட்டுப்பட்டை இழந்து கவிழ்ந்தது.
சாலை குறுகலாக இருந்த காரணத்தினால் எதிர்புறம் வந்த வாகனத்திற்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒதுங்கிய போது, கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்துள்ளது. அப்போது அதன் மீது மேலே அமர்ந்திருந்த சிக்கந்தர், அஜய், பிரபாகர் உள்ளிட்ட மூன்று நபர்கள் மண்ணில் புதைத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலை விபத்தில் உயிரிழந்த 3 வட மாநில தொழிலாளர்கள் உடல்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துவிட்டு தென்னிலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் தாமதத்திற்கு இதுதான் காரணம்! தவெக நிர்வாகிகள் ஓடிவிட்டார்களா? நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி...!
இதையும் படிங்க: காலில் விழுந்தார் விஜய்... சோர்ந்து போயிட்டாரு மனுஷன்! மனைவி, மகளை இழந்த நபர் பேட்டி...!