தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் சுற்றுப்பயணம் நடத்திய போது கூட்டு நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தமிழக அரசியலில் புதிய அலை எனக் கூறப்பட்ட விஜயின் சுற்றுப்பயணத்தை இந்த சம்பவம் முடக்கிப் போட்டது. தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகளை கரூர் சம்பவம் முடக்கியிருந்த நிலையில், 28 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்திருந்தார். கட்சியின் அன்றாட பணிகளை இந்தக் குழு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
நிர்வாக குழு கூட்டம் முடிவடைந்த பிறகு தமிழக வெற்றி கழகத்தின் மாநிலத் துணைச் செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வழிகாட்டு நெறிமுறை வந்த பின்பு விஜய் சுற்றுப்பயணம் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழுவில் அடுத்த கட்ட பணிகள் மற்றும் வரும் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது என்று கூறினார். போக்குவரத்தை முறையாக காவல்துறை ஒழுங்கு செய்யாததை விஜய் பிரச்சார இடத்திற்கு தாமதமாக செல்ல காரணம் என்றும் தெரிவித்தார். காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யாததால் ஒரு மணி நேரத்தில் செல்ல வேண்டிய பகுதிக்கு 7 மணி நேரம் ஆனது என்றும் கூறினார். விஜய் வாகனத்தை சுற்றி பின் தொடர்ந்து வந்த வாகனங்களை அகற்ற வேண்டியது காவல்துறை பொறுப்பு என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பணம் இருந்தால் தான் அரசு பதவியா? நகராட்சி நிர்வாகத்துறை ஊழலுக்கு தவெக கண்டனம்...!
கரூர் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்புகளை அரசியலாக்க தமிழக வெற்றி கழகம் விரும்பவில்லை என்று கூறினார். கூட்ட நெரிசலில் உறவை இழந்த பெண் பணத்தை திருப்பி அனுப்பியது அவர்களின் குடும்ப பிரச்சனையால் நிகழ்ந்தது என்றும் விளக்கமளித்தார். கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு கரூர் செல்ல முயன்ற தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும் சம்பவ இடத்திலிருந்து தவெக மாவட்ட நிர்வாகிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்துக்கு செக்! நிர்வாக குழுவில் கை வைத்த விஜய்..! அந்த 3 பேர் யாரு தெரியுமா?