கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வேலுச்சாமிபுரம் மக்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இப்படி ஏராளமானவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாது காவல்துறை அதிகாரிகளையும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அவரே CONFUSE ஆகிட்டாரு… திமுக கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் மாநில அரசை கண்டித்தே முழக்கம்… சிரிப்பலை…!
இதனிடையே, விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. கரூரில் விஜய் பிரசாரத்தின்போது 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராக தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல், மதியழகன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரூர் பெருந்துயரம்... ஹைகோர்ட் விசாரணை நடைமுறையில் தவறு... கறார் காட்டிய உச்ச நீதிமன்றம்...!