காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே நீண்டகாலமாக நிலவும் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. சமீப காலத்தில், தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை காரணமாக காவிரி பகுதியில் நீர் இருப்பு குறைந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு நீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது இரு மாநிலங்களுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பொழியவில்லை. கர்நாடகாவின் காவிரி பிடிப்புப் பகுதிகளில், குறிப்பாக கோடகு பகுதியில் சுமார் 35-45 சதவீதம் மழைப்பொழிவு குறைவு பதிவாகியுள்ளது. இதனால், கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்), கபினி, ஹரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட நான்கு முக்கிய அணைகளின் ஒட்டுமொத்த நீர் இருப்பு மொத்த கொள்ளளவின் சுமார் 54 சதவீதம் மட்டுமே உள்ளது.

ஜூன் முதல் ஜூலை இறுதி வரை நீர் வரத்து சராசரியை விட பெருமளவு குறைவாக இருந்ததால், குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமான நீர் இருப்பதாக கர்நாடக அரசு வாதித்தது. டெல்லியில் காணொளி காட்சி வாயிலாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடையாது..! குண்டை தூக்கி போட்ட கர்நாடகா… தவிக்கும் தமிழக விவசாயிகள்..!!
டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்திற்கு 3500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. காவிரி தீர்ப்பாயத்தின் பரிந்துரையை ஏற்று தண்ணீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 5-ல் தமிழக பட்ஜெட்..! எகிறும் எதிர்பார்ப்பு... சபாநாயகர் பிரபாகர் முக்கிய அறிவிப்பு..!!