நெல்லை கேடிசி நகர் பகுதியில் ஜூலை 27ல் தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த ஐ டி ஊழியர் கவின் வயது 25. என்பவரை நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், என்ற வாலிபர் தனது அக்காவுடன் ஆன காதலை கைவிட வலியுறுத்தி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி ஆணவ கொலை செய்தார்.
இதைத் தொடர்ந்து சுர்ஜித் சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். காவல்துறையினர் நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சுர்ஜித்தை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் தந்தையான உதவி சார்பு காவல் ஆய்வாளர் சரவணனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரணை செய்த நிலையில் 3வதாக இந்த வழக்கில் சுர்ஜித்தின் பெரியம்மா மகன் ஜெயபாலனை கைது செய்தனர். தற்போது இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித், அவரது தந்தை உதவி சார்பு ஆய்வாளர் சரவணன், சுர்ஜித்தின் உறவினரான சகோதரர் ஜெயபாலன் ஆகிய மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்... வெளியானது பகீர் காரணம்...!
கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி சார்பாக சரவணன், ஜெயபாலன் தனித்தனியாக நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல். விசாரணை செய்த நீதிபதி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஜாமின் வழங்காமல் இருப்பதற்காக
சி பி சி ஐ டி காவல்துறையினர் இந்த வழக்கின் உண்மை தன்மையை விசாரணை செய்து பல்வேறு வெளிவராத தகவல்களை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில் கொலை செய்யப்பட்ட உடன் சுர்ஜித்தின் தந்தையான சரவணன் அவரது தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் பிறகு சுர்ஜித் தனது உறவினரான ஜெயபாலனின் இடத்திற்குச் சென்றதாகவும் அங்கு சுர்ஜித்தின் வாகனத்தின் நம்பர் பிளேட் அவரது உடை மற்றும் தடயங்களை அழிக்க ஜெயபாலன் உதவியது உள்ளிட்ட பல்வேறு வெளி வராத தகவல்கள் இடம்பெற்று இருந்தது.
இதன் தொடர்ச்சியாக சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கின் கூடுதல் தகவல்களை சேகரிக்கும் விதமாக கவினுடன் பள்ளி மற்றும் கல்லூரி சமயங்களில் ஒன்றாக படித்த 10க்கும் நண்பர்களைப் நேரில் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அவர்களிடம் பல்வேறு ரகசிய தகவல்களை கேட்டு அதன் மூலம் தங்களது அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இன்னும் வெளி வராத பல்வேறு தகவல்கள் குற்ற பத்திரிக்கையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் சிபிசிஐடி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உளுந்து, பச்சைப்பயறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்.. தமிழக அரசு அறிவிப்பு..!!