தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞரான கவின்குமார், சென்னையில் ஒரு பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தவர்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், தனது தாத்தாவுக்கு உடல்நலக் குறைவு காரணமாக திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் அமைந்த சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.
மருத்துவமனை வாசலில் காத்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு இளைஞர் கவினை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பிச் சென்ற சம்பவம் குறித்த விசாரணையில், கொலையை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞர் செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: புழு விழுந்த உணவு, துர்நாற்ற நீர்! இது சமூகநீதி விடுதியா? நோய் பரப்பும் கூடாரம்.. நயினார் விளாசல்..!
போலீசில் அவர் சரணடைந்த நிலையில், கவினை வெட்டிக் கொலை செய்ததாக தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, பாளையங்கோட்டை காவல்துறையினர் சுர்ஜித் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதித்துள்ளனர்.
பெண்ணின் பெற்றோர்களான எஸ்ஐ தம்பதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, தங்களுக்கு நீ கிடைக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் எஸ்ஐ தம்பதியை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் கவிஞன் பெற்றோர் தொடர்ந்து குற்றம் சாட்டை வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லை காவல்துறை மீதான அடுக்கடுக்கான புகார்களை கனிமொழி எம்பி யிடம் கவிஞன் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். காவல்துறை என்பதால் அவர்கள் எளிதாக தப்பி விடுவார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொலை குற்றவாளிகளை காப்பாற்ற காவல்துறையினர் முயல்வதாகவும் கவிதை கொலை செய்தது காவல்துறை தான் என குற்றம் சாட்டினர். கவினின் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய கனிமொழி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி கொட்டியும் இந்த நிலை! கழிப்பறையை கூட விட்டு வைக்காத திமுக ஊழல்.. சாடிய நயினார்..!