நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி விற்பனை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் ஒத்திவைப்பு
பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி விற்பனை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு கடந்த மாதம் நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், அருள் முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
தென் மண்டல காவல்துறை தலைவர், பிரேமானந்த் சின்ஹா ஆகியோரை கொண்ட சிறப்பு குழுவை நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: வார்த்தையை அளந்து பேசுங்க சாட்டை... தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்த தவெக நிர்வாகிகள்...!
அப்போது, மனுதாரர் தரப்பில் இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.கிட்னி திருட்டு வழக்கை
சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: எடப்பாடி உருவப்படத்திற்கு செருப்பு மாலை... துடைப்பத்தால் அடித்து ஆவேசத்தை வெளிக்காட்டிய காங்., தொண்டர்கள்...!