பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது. 
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் தொல்லை பெரும் சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில், கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 
இதையும் படிங்க: இரக்கமற்ற முதல்வர்! அந்த சார் கொடுத்த தைரியமா? பாலியல் வன்முறை குறித்து நயினார் விளாசல்...!
இதனிடையே பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அதிமுகவினர் புது முயற்சியை மேற்கொண்டனர். கோவையில் தற்காப்புக்காக பெண்களுக்கு அதிமுக சார்பில் பெப்பர் ஸ்பிரே விநியோகிக்கப்பட்டது. கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் சுந்தராபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: 2026- ல் நம்ம ஆட்சி தான்... திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஒன் டூ ஒன் ஆலோசனை...!