தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரப்பத்தியில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டில் அலை கடலென தொண்டர்கள் கலந்து கொண்டனர். இலட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார் விஜய். அப்போது, நமது ஒரே கொள்கை எதிரி பாஜக தான் என்றும் ஒரே அரசியல் எதிரி திமுக தான் எனவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுப்பதாக கூறிய விஜய், பாசிச பாஜகவும் பாய்சன் திமுகவும் தான் எதிரி என கூறினார். பாஜகவின் கூட்டணி பொருந்தா கூட்டணியாக இருப்பதால் திமுக எதிர்ப்பதைப் போல் எதிர்த்து ஆதரிப்பதாக தெரிவித்தார். ஸ்டாலின் அங்கிள்., வாட் அங்கிள்., இட்ஸ் ராங் அங்கிள் என பேசினார்.

முதலமைச்சரை அங்கிள் என்று குறிப்பிட்டு பேசிய விஜய்க்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து திமுக எம்எல்ஏக்கள் பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜய் அங்கிள் என கூப்பிட்டதில் என்ன தவறு இருக்கிறது என கே.எஸ். ரவிக்குமார் ஆதரவாக பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்... திருமாவளவன் குற்றச்சாட்டு..!
நான் முதல்வரை நேரில் பார்த்தாலும் அங்கிள் என்றுதான் அழைப்பேன் என்றும் அங்கிள் என அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார். முதல்வரை விஜய் அங்கிள் என அழைத்ததில் தவறில்லை என்றும் கே. எஸ். ரவிக்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீமான் சொல்றது 100/100 உண்மை.. விஜய் பற்றிய விமர்சனத்தை ஆதரித்த பிரேமலதா விஜயகாந்த்!