தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வருங்கால பாரதப் பிரதமர் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர்களும் ஆதரவாளர்களும் கூறி வருவது தொடர்பான கேள்விக்கு, பெரிய விவகாரங்கள் குறித்து இப்போது பேச வேண்டிய அவசியமில்லை என்றும், முதலில் நாட்டைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துவோம் என்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரிடம், தமிழக சட்டமன்றத்திலும் பொதுவெளியிலும் தவெக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் விஜயை அடுத்த பிரதமர் என்று முன்னிறுத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: மேகதாது அணையால் 2 மாநிலங்களும் பயன் பெறலாம்.. விஜய்க்கு முன்பே சொன்ன டி.கே சிவக்குமார்!!
அதற்குப் பதிலளித்த அவர், "இந்த விவகாரம் குறித்து நான் தற்போது எதுவும் விரிவாகப் பேச விரும்பவில்லை; பெரிய அரசியல் நகர்வுகள் குறித்து இப்போதே விவாதிக்கத் தேவையில்லை; நாமெல்லாம் இன்னும் அரசியலில் இளமையாகவே இருக்கிறோம்; எனவே இப்போது நாட்டின் வளர்ச்சிக்கும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" எனக் கூறி இக்கேள்விக்குப் புன்னகையுடன் பதிலளித்து நகர்ந்தார்.
இதையும் படிங்க: அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!