அடாவடியாக கடன் வசூல் செய்ததாக நிதி நிறுவனத்தின் மேலாளரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாய நடவடிக்கைகளைத் தடுத்தல் சட்டம், 2025 எனும் இந்த சட்டம், கடன் வாங்கியவர்களை மிரட்டுதல், தொல்லை கொடுத்தல், வீட்டுக்குள் நுழைந்து அச்சுறுத்துதல் போன்ற கொடூரமான வசூல் முறைகளை கடுமையாக தடை செய்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக விவசாயிகள், பெண்கள், சுய உதவிக் குழுக்கள் போன்ற பலவீனமான பிரிவினரைப் பாதுகாக்கும் நோக்கில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரத்தில் அடாவடி கடன் வசூலைத் தடுக்கும் தமிழ்நாடு அரசின் புதிய சட்டத்தின் கீழ், தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் என்பவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று JCB வாங்கிய நிலையில், தவணை செலுத்தாததால் முறையான சட்ட நடைமுறையைப் பின்பற்றாமல் நிதி நிறுவன ஊழியர்கள் செய்த செயலால் மனமுடைந்த அப்பாஸ், தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.
இதையும் படிங்க: 7 மணிக்கு மேல் NO கடன் வசூல் கால்..! STRICT ORDER... அதிரடி காட்டிய RBI..!
இதனை அடுத்து, தமிழ்நாடு அரசு சமீபத்தில் கொண்டு வந்த பணக்கடன் கட்டாய நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், அந்நிறுவனத்தின் மேலாளர் மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நிதி நிறுவனங்கள் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி கடன் வசூலை மேற்கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: ஆப்கானில் நடக்கும் அக்கிரமம்..!! மனைவியை கணவர்கள் அடிப்பது தப்பு இல்லையாம்..!! வந்தாச்சு புதிய சட்டம்..!!