செம்பட்டி அருகே அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்து இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே நிலக்கோட்டை சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனங்களின் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியானார்கள் .
நிலக்கோட்டையை சேர்ந்த ஜெகதீஷ் (18) மற்றும் மைக்கேல் பாளையம் ராயப்பன்பட்டியைச் சேர்ந்த கிரிஸ்டோபர் (30) ஆகிய இருவரும் நிலக்கோட்டையை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சாலையில் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தனர் .
இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி... வேன் மீது மோதிய அரசு பேருந்து... பயணிகளின் நிலை என்ன?
ஒட்டுப்பட்டி பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிலக்கோட்டையில் இருந்து கரூர் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக இரண்டு இரு சக்கர வாகனங்களின் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் ஜெகதீஷ் மற்றும் கிறிஸ்டோபர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், சிறிது நேரத்திலேயே சம்பல இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த பாண்டி செல்வம் என்பவர் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்
நிகழ்வு இடத்திற்கு வந்த செம்பட்டி போலீசார் விபத்தில் பலியான இருவர் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தென்காசியை உலுக்கிய கோர விபத்து..!! தனியார் பேருந்தின் உரிமம் ரத்து..!! கலெக்டர் அதிரடி உத்தரவு..!!