தமிழகத்தில் போதைப்பொருட்கள் பழக்கம் அதிகரித்திருப்பது தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள், அரசியல் அரங்கில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக திமுக ஆட்சி அமைந்த பிறகு, போதைப்பொருள் புழக்கம் மற்றும் கடத்தல் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றம் சாட்டி வருகின்றன.
இதற்கிடையில் தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பின், போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக மாற்றியிருக்கிறோம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.கஞ்சாவை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக எங்கேயும் இல்லாத நிலை இருக்கிறது என்று கூறினார். குற்றச்சாட்டு சொல்லும் எதிர்க்கட்சிகள் எங்கேயாவது விற்கிறார்கள் என்று தகவல் சொன்னால், அவர்களின் ரகசியம் பாதுகாத்து நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் '0' என்று கூறும் அமைச்சருக்கு அறிவு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. அறிவே இல்லாத துறையைத்தான் அமைச்சரிடம் கொடுத்திருக்க வேண்டும்" என்று நேரடியாக விமர்சித்தார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த விமர்சனம் உடனடியாக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, தவெக கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருக்கும் அவர், ஆளும் திமுக அரசின் அமைச்சரை நேரடியாக தாக்கியது எதிர்க்கட்சிகளின் உத்தியாகவே பார்க்கப்பட்டது. முதலமைச்சரோடு வாக்கிங் போய்விட்டு, இட்லி கடை படம் பார்ப்பது தான் அவருக்கு தெரியும் என்று கூறி இருந்தார்.
இதையும் படிங்க: விஜய் தமிழ்நாட்டின் எதிர்காலம் என அறிந்தவர் செங்கோட்டையன்... ஆதவ் அர்ஜுனா பெருமிதம்..!
இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலர் ஆதரவும் விமர்சனமும் தெரிவித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்தை முற்றிலும் புறந்தள்ளுவதாக கூறினார். ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனங்களை நான் புறந்தள்ளுகிறேன் என்றும் கரூர் நிகழ்வில் 41 பேர் இறந்தபோது மனிதாபிமானமற்ற முறையில் ஓடி ஒளிந்த அறிவாளிகள் எல்லாம் என்னை அறிவாளி இல்லை என்று பேசுவதை பொருட்படுத்த தேவையில்லை என்று கடுமையாக பதிலடி கொடுத்தார்.
இதையும் படிங்க: 10 வருஷமா உழைக்கிறோம்… பொறுப்பு தரல… செங்கோட்டையினை முற்றுகையிட்ட தவெக தொண்டர்கள்…!