தமிழ்நாடு அரசு, கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக 2025 ஜூலை 21 அன்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு தலைமைச் செயலாளர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை 2022 இல் தீர்ப்பளிக்கையில், கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது வாரிசுதாரர்களின் சட்டபூர்வ உரிமையல்ல என்று தெளிவுபடுத்தியது. பணி நியமனம் வழங்குவது, விண்ணப்பதாரரின் தகுதி, குடும்பத்தின் வறுமை நிலை, மற்றும் காலிப் பணியிடங்களைப் பொறுத்தது. மேலும், பொது நிர்வாகத்தின் திறமையை உறுதி செய்ய, கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை குறைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இந்த நிலையில், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை அமல் படுத்தாததற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தற்போதைய தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆஜராகினர். அப்போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த ஏற்பட்ட கால தாமதத்திற்கு தலைமைச் செயலாளர் நிபந்தனையற்ற மன்னிப்பு கூறினார்.
இதையும் படிங்க: மருத்துவக் கழிவுகள் கொட்டினால் குண்டாஸ்! அமலுக்கு வந்தது சட்டத்திருத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு..!
தலைமைச் செயலாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி கொள்ளவில்லை என்றும் தலைமைச் செயலாளர்களுக்கு எதிராக வழக்கை விசாரணை கிடைத்ததில் சங்கடமான நிலையில் இருப்பதாக உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும், கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க மாநில அளவிலான பட்டியலை பராமரிப்பது என குழு முடிவு செய்துள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்தார். அரசு பணியாளர் விதிகளில் திருத்தம் மேற்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்தார். கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பாக அரசு பணியாளர் விதிகளில் இரண்டு வாரங்களில் திருத்தம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று இருவரும் ஆஜரான நிலையில் அவர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்க முடித்து வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பச்சிளம் குழந்தைகளுக்கு தொட்டில் கூட இல்லை.. இதுதான் உலகம் போற்றும் மருத்துவமா? நயினார் கண்டனம்..!