கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனை, மகப்பேறு மற்றும் பெண்கள் நலன் தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், 2019-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது, மற்றும் இந்த மருத்துவமனை மாவட்டத்தின் முக்கியமான சுகாதார வசதிகளில் ஒன்றாக உள்ளது. இந்த மருத்துவமனை, தமிழ்நாடு அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறையின் கீழ் இயங்குகிறது. இது மாவட்டத்தில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு மருத்துவ வசதி. இந்த மருத்துவமனை பொதுவாக மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனைகள், இயல்பான பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம், பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் ஆரம்பகால பரிசோதனைகள், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை, கருத்தடை முறைகள் மற்றும் ஆலோசனைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மருத்துவமனையில் கிழிந்த மற்றும் சேதமடைந்த மெத்தைகள் இருப்பதாகவும் பிறந்த குழந்தைகளுக்கு தொட்டில் வசதி இல்லாத நிலையில் தரையில் படுக்க வைக்கும் அவல நிலை இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையின் நிலையை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டித்துள்ளார். கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும் காணொளி மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்தார்.
பச்சிளம் குழந்தைகளைப் படுக்கவைக்கக்கூட வசதியில்லாத இந்த மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். முறையான வசதிகள் ஏற்படுத்தித் தருவதை விட்டுவிட்டு விளம்பரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் சாடினார்.
இதையும் படிங்க: அராஜக ஆட்சிக்கு அழிவு காலம் நெருங்கிடுச்சு! கொந்தளித்த நாயனார் நாகேந்திரன்..!
இதையும் படிங்க: ராபர்ட் ப்ரூஸ் வெற்றியை எதிர்த்த வழக்கு... குறுக்கு விசாரணைக்கு ஆஜரான நயினார் நாகேந்திரன்!