உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதீனத்தின் வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த மதுரை ஆதீனம் உட்பட யாருக்கும் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சைவ மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து விபத்துக்குள்ளான காருடன் மதுரை ஆதீனம் சென்னைக்கு புறப்பட்டார். இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் கார் விபத்து திட்டமிட்ட சதி என தருமபுர ஆதீனம் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்தது.

இந்த நிலையில், கார் மீது நிகழ்த்தப்பட்ட விபத்து தொடர்பாக மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கார் விபத்து நிகழ்த்தப்பட்டது சதித்திட்டம் தான் என்றும் காவல் நிலையத்தில் எந்தவித புகார் அளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கார் விபத்து ஒரு திட்டமிட்ட சதி..! தருமபுர ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு..!

இந்த விபத்து தொடர்பாக பேசிய மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுனர், தங்கள் காரை இடித்த மற்றொரு காருக்கு நண்பர்களை கூட இல்லை என்றும், ஆதீனத்தின் கார் மீது மோதிய மற்றொரு காரில் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது எனவும் கூறினார். பாரி கார்டை தாண்டி வந்து தங்கள் காரை இடித்ததாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் இது திட்டமிட்டு நகர்த்தப்பட்ட சதித்திட்டம் தான் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கார் விபத்து ஒரு திட்டமிட்ட சதி..! தருமபுர ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு..!