கிரானைட் மோசடி வழக்கில் சாட்சியளிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு தமிழக போலீஸார் பாதுகாப்பு வழங்காவிட்டால், மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும் என மதுரை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மதுரையில் சட்ட விரோத கிரானைட் குவாரி வழக்குகள் மதுரை கனிம வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் ஆட்சித் தலைவர் சகாயம் நேரில் ஆஜராக ஏற்கெனவே 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவருக்கு மூன்றாவது சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை என்றும் தனக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது நியாயமற்றது என சகாயம் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், சகாயத்துக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே சட்டவிரோத கிரானைட் குவாரி வழக்கு நீதிபதி லோகேஸ்வரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சகாயம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அப்போது நீதிபதி, நீதிமன்றத்தில் ஆஜராக சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை? அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா? என்பதை அரசு வழக்கறிஞர் காவல்துறையிடம் கேட்டு நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். அப்படி பாதுகாப்பு வழங்காவிட்டால், பாதுகாப்பு வழங்க மத்திய பாதுகாப்பு படைக்கு உத்தரவிடப்படும் எனக்கூறி விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ஒர்க் ஃப்ரம் ஃபீல்ட்.. கொடைக்கானலிலும் ரோடு ஷோ.. தெறிக்கவிடும் விஜய்.!!
இதையும் படிங்க: TVK...TVK... காற்றில் பறந்த விஜயின் அட்வைஸ்.. சொல் பேச்சை கேட்காமல் ரசிகர்கள் அலப்பறை..!