தமிழகத்தில் பெண்களின் நலனை மையப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தொடர்ந்து பயனாளிகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் வாக்குறுதியாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று ஜூன் மாதத்துக்கான ரூ.1,000 தொகை அனைத்து தகுதியான பெண்களின் வங்கிக் கணக்குகளிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து, முந்தைய திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் இடைக்காலத்தில் தொடர்கின்றன.

இருப்பினும், தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கு திட்டத்தை மறுசீரமைக்க கால அவகாசம் தேவை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படாத நிலையில், அரசாணை இல்லாமல் தொகை உயர்வை நடைமுறைப்படுத்த முடியாது என்பது நிர்வாக விதிமுறை.
இதையும் படிங்க: ரூ.2,500 ஆக உயர்கிறதா மகளிர் உரிமைத்தொகை...? - எப்போது கிடைக்கும்? - முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு...!
இந்த நிலையில், ஜூன் மாதத்துக்கான தொகை வழக்கமான ரூ.1,000 ஆகவே வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வரவு வைக்கப்படும் பழக்கத்தின்படி, இன்று பயனாளிகளின் கணக்குகளில் பணம் வரவு செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 1.31 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். ஏற்கனவே பெற்று வரும் பயனாளிகளுக்கு தடையின்றி தொகை வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: 52வது பிறந்தநாளில் CM விஜய்க்கு உலக சாதனை பரிசு... 1000 மாணவர்கள் சிலம்பத்தில் அசத்தல்..!