தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் புதிய சொகுசு கார்கள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட மறுநாளே, எம்.எல்.ஏ-க்களுக்கான கார்களைத் தேர்வு செய்வதற்காக சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முன்னணி நிறுவனமான மஹிந்திரா ஆட்டோ நிறுவனத்தின் 6 நவீன ரகக் கார்கள் டெஸ்ட் டிரைவ் சோதனைக்காகக் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளன.
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, எந்த வகையான காரை இறுதி செய்வது என்பதற்கான கள ஆய்வுகள் தலைமைச் செயலகத்தில் முழுவீச்சில் தொடங்கியுள்ளன.

இதற்காக, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் XUV 7XO, XUV 3XO, Scorpio-N, Scorpio Classic, Bolero மற்றும் Bolero Neo ஆகிய 6 முன்னணி எஸ்.யு.வி (SUV) மாடல் கார்கள் தலைமைச் செயலக வளாகத்தில் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: டாஸ்மாக் போல ரேஷனுக்கும் ஆன்லைன் வசதி! பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!
தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இந்தக் கார்களின் மைலேஜ், சொகுசு வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களுக்கான நம்பகத்தன்மை ஆகியவற்றை நேரில் பரிசீலித்து, டெஸ்ட் டிரைவ் செய்து வருகின்றனர்.
இந்த 6 மாடல்களில் அதிகப் பாதுகாப்பு மற்றும் வசதிகள் கொண்ட குறிப்பிட்ட ஒரு மாடல் கார் இறுதி செய்யப்பட்டு, 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்பட உள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கார் கேட்ட எம்எல்ஏக்கள்! தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அம்பலமான சொத்து மதிப்பு! அடுத்த சர்ச்சை!