மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டிசம்பர் 29 முதல் 31 வரை மூன்று நாட்கள் மேற்கு வங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம், 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புரீதியான தயாரிப்புகளை வலுப்படுத்துவதற்காகவே அமைந்தது. கொல்கத்தாவில் தொடங்கிய இந்தப் பயணம், கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடனான தொடர்ச்சியான ஆலோசனைகள், அமைப்புசாரா கூட்டங்கள் மற்றும் சில முக்கிய அறிவிப்புகளால் நிரம்பியதாக இருந்தது.
டிசம்பர் 29 அன்று மாலை, கவுகாத்தியில் இருந்து நேரடியாக கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அமித் ஷா, மேற்கு வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா, எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மத்திய அமைச்சர் சுகந்த மஜும்தார் உள்ளிட்ட மூத்த தலைவர்களால் வரவேற்கப்பட்டார். விமான நிலையத்திலிருந்து நேராக சால்ட் லேக் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கு கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், தேர்தல் தயாரிப்பு, உறுப்பினர் இயக்கம் மற்றும் பூத் நிலை வலுப்படுத்தல் போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
மேலும், மத்திய தலைவர்களான சுனில் பன்சால், அமித் மால்வியா, பூபேந்திர யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.அடுத்த நாள், டிசம்பர் 30 அன்று, அமித் ஷா தொடர்ச்சியாக பல்வேறு உள் கட்சிக் கூட்டங்களில் ஈடுபட்டார். மாநில சட்டசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கொல்கத்தா மாநகராட்சி கவுன்சிலர்களுடன் தனித்தனி அமர்வுகளை நடத்தினார். இதன்பிறகு, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) மாநில நிர்வாகிகளுடன் முக்கியமான ஆலோசனை நடத்தினார். இது, பாஜகவுக்கும் அதன் சித்தாந்த அமைப்புக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தியது.
இதையும் படிங்க: ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க... மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ஏமாந்து போன ரசிகர்கள்... பகிரங்க மன்னிப்பு கேட்ட மம்தா...!
மேற்கு வங்க மாநிலத்திற்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். தேர்தல் வந்ததும் மேற்கு வங்கத்தில் துச்சாதனம் துரியோதனனும் தோன்று தொடங்கி இருக்கிறார்கள் என்று விமர்சித்து இருக்கிறார். சகுனியின் சீடரான துச்சாதனன் தகவல்களை சேகரிக்க இங்கு வந்துள்ளார் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: நீண்ட ஆயுள், நிம்மதியான வாழ்க்கை அமையட்டும்... EPS ஆங்கில புத்தாண்டு வாழ்த்து...!