கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் மரகதவேல். ஓட்டுநரான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் மனைவி மற்றும் ஆறு மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர் தனது தேவைக்காக பனங்காட்டூரைச் சேர்ந்த ஜெயகாந்தன் மற்றும் குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த கமல் ஆகியோரிடம் வட்டிக்கு கடன் வாங்கியதாக தெரிகிறது. வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தும் கூடுதலாக பணம் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும் கடிதம் ஒன்றை எழுதிவிட்டு மரகதவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜெயகாந்தன் மற்றும் கமல் ஆகிய இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேனியில் துணிகரச் சம்பவம்.. நிலத்தகராறில் நிகழ்ந்த இரட்டைக்கொலை..!

இதனிடையே குற்றவாளிகளை கைது செய்யும் வரை தனது உடலை பெற்றோர் வாங்கக்கூடாது என்ற கோரிக்கையும் மரகதவேல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தலையை சிதைத்து நர்ஸ் கொடூர கொலை.. சிசிடிவியால் சிக்கிய கணவன்..!