தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு தொடர்ச்சியாக வஞ்சித்து வருவதாக புகார் தெரிவித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 434 கோடியை வழங்காமல் தொடர்ச்சியாக தமிழ்நாட்டை வஞ்சித்து வரக்கூடிய மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக அரசு சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்களில் வரும் 29ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் என்பது நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இதுதொடர்பாக குரல் எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார். குறிப்பாக 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாகவே தொடர்ந்து நிதி என்பது வழங்கப்படாமல் இருக்கக்கூடிய நிலையில் இது இதனை எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுப்ப வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் பணியிட மாற்றம்.. ஆசிரியர் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!
இதுதொடர்பாக கடந்த 25ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய போது இதற்கு பதில் அளிக்காமல் மத்திய அமைச்சர் மறுத்தார். இதுதொடர்பாக 100 நாள் வேலை திட்டத்தில் அந்த கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காத நிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது 29 ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட கழக நிர்வாகங்கள் சார்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் முன்னணி இருக்கக்கூடிய தொண்டர்கள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் என்பது நடைபெறுவதற்கான ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும், யார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பது தொடர்பான விவரங்களை உடனடியாக திமுக தலைமை கழகத்திற்கு அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நினைவில் காதலன்.. திருமணமான 2 வாரத்தில் கணவன் கொலை.. கூலிப்படை ஏவி கதையை முடித்த மனைவி..!