செங்கல்பட்டு மாவட்ட மதுராந்தகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு அந்த அமைப்பின் தலைவர் விக்ரமராஜா தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வணிகர்களுக்கு உறுதுணையாக திமுக அரசு எப்போதும் இருக்கும் என உறுதி அளித்தார். தொடர்ந்து மே ஐந்தாம் தேதி வணிகர் தினமாக விரைவில் அறிவிக்கப்பட்டு என்றும், அதற்கான அரசாணை வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

என்னை கோட்டையில் வந்து சந்தித்த போது, மே 5 வணிகர் நாளாக அரசு அறிவிக்கணும் என்ற கோரிக்கையை வைத்தீர்கள். எனவே தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த கோரிக்கைக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். பொதுமக்களுடைய நலன் கருதி அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை ஜூன் நான்காம் தேதியோடு முடிவடைகிறது. இதனை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடித்து அரசாணை வழங்கப்படும் என அறிவித்தார்.
இதையும் படிங்க: பொன்முடி சர்ச்சையில் மிஸ் ஆன முக்கிய தகவல்... உளவுத்துறையை லெப்ட் ரைட் வாங்கிய முதல்வர்!

வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக இருப்போருக்கான உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்,
உணவுப்பொருட்கள் விற்பனை, சேமித்தல் தொழில்கள் தவிர்த்து 500 சதுர அடிக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு சுய சான்றிதழ் முறையில் இனி தொழில் உரிமம் வழங்கப்படும், சென்னை மாநகராட்சி நீங்கலாக பிற மாநகராட்சிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் உள்ள பிரச்னைகளை தீர்க்க அமைக்கப்பட்ட வழிகாட்டுக்குழுவைப் போல, சென்னையிலும் பிற நகராட்சிகளிலும் அமைக்கப்படும். 9 சதுர மீட்டருக்கு மிகாமல் வைக்கப்படும் பெயர்ப்பலகைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. வர்த்தகர்கள், சிறு வியாபாரிகளுக்கான புதிய இணையதளம் உருவாக்கப்படும். 22 சேவைகளை இதன் மூலம் வணிகர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிரடியான 6 அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் கைக்குப் போன ஸ்பெஷல் ரிப்போர்ட்... திமுக அமைச்சர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!