தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான சி. ஜோசப் விஜய், தனது சொந்தத் தொகுதியான பெரம்பூருக்கு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜூலை 13, 2026 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பெரம்பூர் மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய ஒரு முக்கிய தருணமாக அமைந்தது. பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஷர்மா நகரில் அமைந்துள்ள MLA அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் புதுப்பித்த நிலையில் திறந்து வைத்தார்.
அங்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சித்தாந்தத் தலைவர்களின் உருவப் படங்களுக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். அலுவலக வசதிகளை நேரில் பார்வையிட்ட அவர், அங்கு சேவைகளுக்காக விண்ணப்பித்த ஐந்து பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அதன் பின்னர், அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த இ-சேவை மையத்தையும் திறந்து வைத்தார். பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற முதலமைச்சர், பெரம்பூர் தொகுதியின் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். பெரம்பூர் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க tvkcm.com என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அருகிலுள்ள ரேஷன் கடைக்கு நடந்து சென்ற முதலமைச்சர், அங்கு பலனாளிகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வழங்கினார். உணவுப் பொருட்களையும் சிலருக்கு வழங்கி, அவர்களின் நிலையை நேரில் அறிந்தார். அதன் பின்னர், வியாசர்பாடியில் உள்ள மெட்ரோபாலிட்டன் போக்குவரத்துக் கழகத்தின் மின்சாரப் பேருந்து டிப்போவைப் பார்வையிட்டு, சில பேருந்துகளில் ஏறி ஆய்வு செய்தார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது பெரம்பூர் தொகுதிக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,013 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நகர உள்கட்டமைப்பு, வீட்டுமனை மேம்பாடு, குடிநீர் மற்றும் சுகாதாரம், பொது வசதிகள், உயர் கல்வி உள்ளிட்ட 50 திட்டங்கள் இதில் அடங்கும். மேலும், MLA உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏழு திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: MLA பல்லவி - மேயர் பிரியா மோதல்..!! சட்டசபை வரை சென்ற பிரச்சனை..! DOT வைத்த சபாநாயகர்..!!
இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா கலந்து கொள்ளவில்லை. தமிழக வெற்றி கழக அரசு அமைந்ததிலிருந்து மேய்ப்பிரையா இதுவரை முதல்வர் விஜய்யை நேரில் மரியாதை நிமித்தமாக கூட சந்தித்தது இல்லை. இந்த நிலையில் பெரம்பூர் தொகுதிக்கு முதலமைச்சர் வந்தபோது கூட அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் முரண்பட்டு வருகிறார். இது தொடர்பாக செய்தியாளர்கள் மேயர் பிரியாவிடம் கேள்வி எழுப்பிய போது பதில் அளிக்க முடியாமல் திணறினார். அழைப்பு விடுக்காமல் எப்படி செல்வது என்று கேள்வி எழுப்பிய மேற்பிரியாவிடம் முறையாக அழைப்பு விடுத்தார்கள் என தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்று விட்டு முதல்வர் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தனது காரில் ஏறி சென்றார்.
இதையும் படிங்க: அம்பேத்கர் சிலை திறப்பு சிக்கல்..! இதைக் கூடவா செய்ய முடியல..? தவெகவை பந்தாடிய சீமான்..!!