பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சமீப நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தூய்மை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மண்டலம் 5 மற்றும் 6 மட்டுமல்லாது அனைத்து மண்டலங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் மற்ற மண்டலங்களில் உள்ள தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்துதன் பேரில் அவர்களுக்கும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அடுத்த மாதம் முதல் ஊதிய உயர்வு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேலையும் உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் துவங்கி வைப்பார் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் ஓர் மெரினா புரட்சியா? தூய்மை பணியாளர்களை தேடித் தேடி கைது செய்யும் போலீஸ்…
தொடர்ந்து டெங்கு பாதிப்பு தொடர்பாக பேசிய மேயர் பிரியா, பொதுமக்கள் தண்ணீரை பிடித்து வைக்கும் பொழுது அதனை மூடி மூடி வைக்க வேண்டும் என்றும் நல்ல தண்ணீரில் தான் டெங்கு கொசு உருவாகுவதாகவும் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி சார்பாக டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்காதீங்க... மா. சு. எச்சரிக்கை...!