ஆன்லைன் மருந்து விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையை காக்க வேண்டும். உயிர்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்கள், அதிக தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். போலி மருந்து விற்பனையை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று மருத்தகங்கள் மூடப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து கடைகளை அடைத்து மருந்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முறையற்ற வகையில் செயல்படும் ஆன்லைன் மருந்து வணிகத்தை தடை செய்ய கோரி அகில இந்திய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு மருந்து வணிகர்கள் சங்கம் அழைப்பு விடுத்திருந்தனர். இதனை ஏற்று ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் கடைகளை அடைத்து மருந்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆன்லைன் மருந்து விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையை காக்க வேண்டும். உயிர்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்கள், அதிக தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். போலி மருந்து விற்பனையை தடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: நைட் 10 மணிக்கு மேல போலீஸ் பண்ற காரியமா இது?... குண்டுக்கட்டாய் தூக்கி கைது செய்த சக காவலர்கள்...!
ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கலாசார சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டும், மருந்தக செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மருந்து வணிகர்கள் முன் வைத்துள்ளனர்..
மருந்து கடைகள் போராட்டத்தினால் மருந்து விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் மருத்துவமனையை சார்ந்துள்ள மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றனர். உயிர்காக்கும் அவசர மருந்து விற்பனை செய்யப்படும் என வணிகர்கள் அறிவித்துள்ளது நோயாளிகளை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
இதையும் படிங்க: குலை நடுங்கவிட்ட `ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்’ - சென்னையில் ஒரே இரவில் 100+ ரவுடிகளை தட்டித்தூக்கிய காவல்துறை...!