தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகளை முறையற்ற முறையில் கையாளுவது ஒரு நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மற்றும் திருநெல்வேலி போன்ற எல்லை மாவட்டங்களில், கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்படுவது தொடர்ந்து புகார்களுக்கு உள்ளாகியுள்ளது. இதனால், பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரித்து வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றமும், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயமும் இந்தப் பிரச்சினையைத் தீவிரமாகக் கருதி, மருத்துவ கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தன. இந்த உத்தரவுகளின் அடிப்படையில், தமிழக அரசு சட்டத்திருத்தத்தை முன்மொழிந்தது. அதற்கு ஆளுநர் ரவியும் ஒப்புதல் கொடுத்துள்ளார்

மருத்துவ கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீது தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982-இன் கீழ் விசாரணையின்றி கைது செய்யப்படுவதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்தச் சட்டம், ஒருவர் குற்றம் செய்யும் முன்பே தடுப்புக் காவல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது.
இதையும் படிங்க: விஜய் தான் விசிலடிச்சான் குஞ்சு ஆகிட்டாரு போல! சரமாரியாக சாடிய அன்பில் மகேஷ்!
மருத்துவ கழிவுகள் தொடர்பான சட்டத் திருத்தம் அமலில் உள்ள நிலையில் மாநகராட்சி குப்பைத் தொட்டியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மதுரை மாவட்டம் அண்ணாநகரில் தனியார் மருத்துவமனை ஒன்று மாநகராட்சி குப்பைத் தொட்டியில் மருத்துவ கழிவுகளை கொட்டி உள்ளது. இதன் காரணமாக அந்த மருத்துவமனைக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை மதுரை மாநகராட்சி விதித்துள்ளது. மருத்துவ கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: முடிந்தது தவெக மாநாடு.. பாரபத்தி பகுதியில் டிராஃபிக் ஜாம்.. ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!!