காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது.

அதுமட்டுமன்றி துருக்கி நாட்டின் ட்ரோன்களை இந்தியாவை நோக்கி அனுப்பி பதிலடி கொடுக்க பாகிஸ்தான் நினைத்தது. ஆனால் நம் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு அந்த முயற்சியை முறியடித்தது. நம்மை சீண்டினால் பதிலடி எப்படி இருக்கும் என்பதை நம் நாடு பாகிஸ்தானுக்கு காட்டியது.
இதையும் படிங்க: அவரு பாஜகவின் 'ஸ்லீப்பர் செல்'லுங்க.. சசி தரூரை போட்டு பொளக்கும் தோழர்கள்.!!
இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது. இதனால் பயந்துபோன பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி நம் நாட்டிடம் கதறியது. இதையடுத்து நம் நாடும் மோதலை கைவிடுவதாக அறிவித்தது. உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.இனி பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சும் நடத்த மாட்டோம். அப்படி பேசினால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் குறித்து மட்டமே இந்தியா பாகிஸ்தானுடன் பேசும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்தது. பிரதமர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அவரும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பாகிஸ்தானுடன் இனி பேசுவோம் என்றார். பின்னர் பிரதமர் மோடி ஆதம்பூர் விமானப்படை தளம் சென்று ராணுவ வீரர்களை பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

தற்போது எல்லையில் அமைதி திரும்பி உள்ளது. இந்நிலையில் தான் தான் ‛ஆபரேஷன் சிந்தூர் ' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மற்றும் வெற்றிக்கு முழு முதற் காரணமாக இருந்த நம் முப்படை வீரர்களை பாராட்டி கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு பாஜக சார்பில் மூவர்ண கொடி யாத்திரை மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.
அதன்படி நேற்று திருப்பூரில் பாஜகவின் மூவர்ண கொடி யாத்திரை நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய செயலாளரும், மாநில மேலிட பொறுப்பாளருமான அரவிந்த் மேனன், மாநில பொதுச்செயலாளர் ஏபி முருகானந்தம் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அப்போது 2 காவலர்கள் நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

அதாவது திருப்பூரில் ஹோட்டலில் தங்கி இருந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை ஹோட்டலில் யூனிபார்மில் சென்று அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சேர்ந்த போலீஸ் ஏட்டு மந்திரம், 42, மற்றும் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் சேர்ந்த போலீஸ் ஏட்டு சின்னசாமி, 40 ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர்.இவர்கள் பணி நேரத்தில் அவரை சந்தித்து பேசி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இருவரும் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காவலர்கள் மந்திரம், சின்னச்சாமி ஆகியோர் தாங்கள் பணியாற்றிய போலீஸ் நிலையத்தில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உயர்சாதிக்காரர் தலைவராகலாம், ஒரு முஸ்லிம் பிச்சைக்காரராக வேண்டுமா?.. விளாசிய ஒவைசி..!