தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் திட்டங்கள், குறிப்பாக சென்னை மெட்ரோ, நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளுக்கு மணல் உள்ளிட்ட பல கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், மெட்ரோ பணிகளில் பயன்படுத்தப்படும் மணல் எடுப்பதில் முறைகேடுகள் நடைபெறுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
மெட்ரோ பணிகளின் போது தோண்டப்படும் மணல் மற்றும் மண்ணின் அளவு மிகவும் பெரியது. இந்த மணல், கட்டுமானப் பணிகளுக்கு மறு பயன்பாட்டிற்காகவோ அல்லது பிற தேவைகளுக்காகவோ பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த மணல் கையாளப்படும் விதத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதன்மையான குற்றச்சாட்டு, இந்த மணல் அரசு அனுமதியின்றி தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுவதாகும்.

மெட்ரோ பணிகளின் ஒப்பந்ததாரர்கள் அல்லது துணை ஒப்பந்ததாரர்கள், தோண்டப்பட்ட மணலை உரிய அனுமதியின்றி கட்டுமான நிறுவனங்களுக்கு அல்லது மணல் விற்பனை செய்யும் கும்பல்களுக்கு விற்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மெட்ரோ பணியின் போது எடுக்கப்படும் மணலில் முறைகேடுகள் நடைபெறுகிறது என தமிழ்நாடு மாநில மணல் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: எல்லாமே OK... பூந்தமல்லி - போரூர் மெட்ரோ பாதுகாப்பு சான்று பெறும் சோதனைகள் நிறைவு!
மெட்ரோ பணியின் போது அப்புறப்படுத்தப்படும் கழிவுமணலை ஏற்றிச்செல்லும் போது வழக்கு தொடரப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனிம வளங்களை திருடிச் செல்வதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்வதாக குற்றம் சாட்டினார். முறைகேடுகள் நடைபெறுவது முதல்வருக்கும் அல்லது அந்த துறைக்கும் அமைச்சருக்கும் தெரியுமா என்று கேள்வி எழுப்பினார். எனவே, வரும் 15 ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெறும் மெட்ரோ பணிகளில் ஈடுபடும் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா வாங்க!! உங்களை ஆவலா எதிர்பாக்குறோம்! புடினிடம் பர்ஷ்னலாக பேசிய மோடி!!