சென்னையின் போக்குவரத்து நெரிசலில், ஒரு நம்பகமான சேவையாக மாறி உள்ளது சென்னை மெட்ரோ ரயில். 2015-ஆம் ஆண்டு ஜூன் 29 அன்று தொடங்கப்பட்ட இந்த சேவை, மெதுவாகவும் உறுதியாகவும் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அவசியமான பகுதியாக மாற்றமடைந்துள்ளது. 2025-ஆம் ஆண்டு அக்டோபரில், இது வெறும் போக்குவரத்து அமைப்பாக மட்டுமல்லாமல், நகரின் உணர்ச்சி இணைப்புகளையும் பிரதிபலிக்கிறது.
கோயம்பேடு முதல் விம்சோ நகர் வரை நீண்ட 54.1 கி.மீ. தொலைவில் பரவியுள்ள இந்த வலையமைப்பு, இரண்டு முக்கிய வரிசைகளை கொண்டுள்ளது. 41 நிலையங்களுடன் இயங்குகிறது. இதன் மூலம், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளை இணைத்து, லட்சக்கணக்கான மக்களின் பயணங்களை எளிதாக்குகிறது. இந்த சேவையின் வளர்ச்சி, அதன் பயன்பாட்டின் உச்சத்தை அடைந்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில், மெட்ரோ ரயிலில் 1.03 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.

இது தொடக்க காலமான 2015 முதல் இதுவரை முதல் முறையாக ஒரு மாதத்தில் கடந்து வந்த மைல்கல். தீபாவளி தினத்தன்று மெட்ரோ ரயில் சேவை அதிக அளவு பயன்படுத்தப்படும் என்பதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறப்பு அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: REELS எடுக்கத் தடை... கறார் காட்டிய டெல்லி மெட்ரோ நிர்வாகம்...!
சென்னையில் அக்டோபர் 20ஆம் தேதி காலை 5 மணி முதல் இரவு 10 வரை 10 நிமிடங்களுக்கு ஒரு முறையும், இரவு 10 - 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு முறையும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி அக்டோபர் 21ஆம் தேதி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி பரிசு காத்திருக்கு? மாட்டிக்காத... உஷாரு! காவல்துறை எச்சரிக்கை