சென்னை மக்களுக்கு தினம்தோறும் 17 கோடி லிட்டர் குடி தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளில் சாலை ஓர தொட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு 452 ஒப்பந்த லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. லாரிகளில் குடிநீரை கொண்டு செல்லும் போது தெருவோரம் தொட்டிகளில் முழுவதுமாக நிரப்பாமல் மீதமுள்ள தண்ணீரை வணிக நிறுவனங்களுக்கு விற்று ஓட்டுநர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் பணம் செலுத்தி வாங்கும் குடிநீரையும் அவர்களது தொட்டிகளை முழுவதுமாக நிரப்பாமல் மீதமுள்ளவற்றை வெளியில் விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து குடிநீர்வாரிய அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. முறைகேடாக லாரிகளில் குடிநீர் நிரப்பி வெளியே கொண்டு செல்வதால் குடிநீர் வாரியத்திற்கு வருவாய் என ஏற்பட்டுவதாக தெரிகிறது.

இதை எடுத்து குடிநீர் வினியோகத்தில் முறைகேடு நடப்பதை தடுக்க தண்ணீர் எடுத்து சொல்லும் லாரிகளை ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் லாரிகள் எங்கெல்லாம் செல்கிறது என்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். லாரியும் தொட்டியில் சென்சார் குறித்து நீரற்ற நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லும் குடிநீர் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு முழுவதுமாக விநியோகிக்கப்படுகிறதா என்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், குடிநீர் வினியோகம் செய்யும் ஒவ்வொரு லாரிக்கும் அதன் பதிவு எண் அடிப்படையில் ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும் குடிநீர் வினியோகம் தொடர்பான தகவல்கள் அனைத்தும் அதில் இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளனர். தண்ணீர் விநியோகத்தில் முறை கேட்டு ஈடுபட்டால் ஸ்மார்ட் அட்டை நீ இயக்கம் தடைபடுமென்றும் முதன்முறை தடைபட்டால் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் மூன்று தடவைக்கு மேல் முறையீடு நடந்தால் சம்பந்தப்பட்ட லாரியின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: எமனாக வந்த தண்ணீர் லாரி.. சிறுமியின் உயிரை பறித்த விபத்து.. சென்னை கமிஷனர் போட்ட அதிரடி உத்தரவு..!
இதையும் படிங்க: அதுக்கு கூட வரமாட்டார்... விஜய்யை ஒரே வார்த்தையில் முடித்துவிட்ட துரைமுருகன்...!