மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அனல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 24 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்பட்டு 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி எரிப்பதன் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டன் வரை உலர் மற்றும் ஈர சாம்பல் வெளியேறுகிறது. இதனை உலர் சாம்பல் மற்றும் ஈரச்சாம்பல் என தரம் பிரித்து ஒப்பந்தம் விடப்பட்டு நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் சிமெண்ட் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
உலர் சாம்பல் ஒரு டன் ரூ.970-கும், ஈர சாம்பல் ரூ. 89/- கும் விலை நிர்ணயம் செய்து மின் வாரியம் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சிமென்ட் செங்கல், ஹலோ பிரிக்கல் உற்பத்தி செய்யும் சிறு, குறுநிறுவனங்களுக்கு 50 டன் வரை இலவசமாக உலர் சாம்பல் வழங்குவது வழக்கம். இந்நிலையில் சிறு, குறு நிறுவனங்களுக்கு இலவசமாக உலர் சாம்பல் வழங்காமல் தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்களுடன் அனல் மின் நிலைய அதிகாரிகள் கைகோர்த்துக் கொண்டு கள்ளச் சந்தையில் விற்பனை செய்து லாபம் ஈட்டி உள்ளனர்.
இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதோடு சிறு,குரு நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இது குறித்து மேட்டூர், ஆர்.எஸ், பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்தோஷ்(40) சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இன்று வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: தன் கையால் பதக்கம் வாங்க மறுத்த TRB ராஜாவின் மகன்... அண்ணாமலை சொன்ன சொல்..!
இதனை விசாரித்த நீதிமன்ற அமர்வு ஏன் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பியதோடு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நாளைக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், தவறினால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
இது குறித்து பொதுநல வழக்கு தொடர்ந்த மேட்டூர் ஆர். எஸ் பகுதியை சேர்ந்த சந்தோஷ் கூறுகையில் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நடைபெறும் உலர் சாம்பல் முறைகேடு குறித்து பல முறை அனல் மின் நிலைய அதிகாரிகளுக்கும், மின்வாரிய தலைவருக்கும் பல முறை புகார் கொடுக்கப்படும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தேன் அதன் அடிப்படையில் இன்று உயர்நீதிமன்ற அமர்வு கூறிய கருத்து வரவேற்க கூடியது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை கையால் பதக்கம் பெற மறுத்த திமுக முக்கிய புள்ளியின் மகன்... மேடையில் நடந்த தரமான சம்பவம்...!