ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக தலைவர்கள் உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினார். முப்படை தளபதிகள், உளவுத்துறை செயலாளர் உட்பட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த 48 மணி நேரத்திற்குள் ஏப்ரல் 24ம் தேதி ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து இந்தியா ஏவுகணை சோதனை நடத்தியது. அரபிக் கடலில் இருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.
இதையும் படிங்க: தயார் நிலையில் கடற்படை..! இந்த முறை சாவு மணி நிச்சயம்..!
போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குப்வாரா மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

ஏற்கனவே, இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல் மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஏப்ரல் 24 ஆம் தேதி இரவு முதல் இந்த துப்பாக்கி சூடு நடத்தி வரும் பாகிஸ்தான் துருப்புகள் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக இந்திய கடற்படையும் தங்கள் ஆயுத சோதனையில் தீவிரம் காட்டியுள்ளது.

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான DRDO மற்றும் இந்திய கடற்படை இணைந்து தயாரித்த MIGM (Multi-Influence Ground Mine) எனும் ஆயுதத்தை நேற்று சோதனை செய்து அதில் வெற்றி கண்டுள்ளது. இந்த MIGM ஆயுதமானது குறைந்த அளவிலான வெடிபொருள் கொண்டு கடலுக்கு அடியில் சோதனை செய்யப்பட்டது. MIGM என்பது கடலுக்கு அடியில் வெடிக்கும் கண்ணிவெடி போன்றது. இது எதிரி நாட்டு அதிநவீன போர் கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் போன்றவற்றை குறிவைத்து தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம், புனேவில் உள்ள DRDO-ன் உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகியவை இணைந்து இதனை உருவாக்கியுள்ளன.

விசாகப்பட்டினத்தில் உள்ள பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மைக்ரோசிஸ்டம்ஸ் லிமிடெட் ஆகியவை இந்த ஆயுதம் உருவாக்குதலில் உற்பத்தி கூட்டாளிகள் ஆகும். இந்த வெற்றிகரமான சோதனைக்கு பிறகு MIGM யுத்தமானது இந்திய கடற்படையில் சேர்க்க தயாராக உள்ளது என்பதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், DRDO-வின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் உறுதிப்படுத்தினயுள்ளார்.
இதையும் படிங்க: முஸ்லிம்களை குறிவைக்காதீர்கள்.! கடற்படை அதிகாரி மனைவியின் பேச்சால் சர்ச்சை..!