தஞ்சையில் இளையோருக்கான ஆண்கள் உலககோப்பை ஹாக்கி உலகக் கோப்பையை அறிமுகம் செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், மழை காலம் என்பதால் பள்ளிகளில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ஹாக்கி ஆண்களுக்கான உலக கோப்பை போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நடைபெற உள்ளது. இதற்கான உலகக் கோப்பை அறிமுக நிகழ்வு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்துவரப்பட்ட உலகக் கோப்பை அறிமுக நிகழ்வில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள் மேடையில் ஹாக்கி விளையாடி மகிழ்ந்தனர். பின்பு கோப்பையுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். மாணவர்கள் இடையே கோப்பையானது அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: எப்படியெல்லாம் சாவு வருது... குறுக்கே சட்டென வந்த தெருநாய்... மனைவி கண்முன்னே பறிபோன கணவன் உயிர்...!
பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுவாகவே மழைக்காலம் என்று சொன்னால் எந்தெந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பள்ளிகளில் தண்ணீர் தேங்கக் கூடாது, அப்படி தேங்கினால் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும். கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனடியாக மூட வேண்டும். மின்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அனைவருமே கூட்டணியாக தான் உள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கூட்டணியாக தான் உள்ளோம். எங்களது பலம் கூட்டணி தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துகள், ஒவ்வொரு கொள்கைகள், கொண்டவர்களாக இருந்தாலும் பொது எதிரியாக இருக்கக்கூடிய, கொள்கை எதிரியாக இருக்கக் கூடியது யார் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். அவர்களை எதிர்க்க வேண்டிய மிகப்பெரிய கட்டாயம் நமக்கு இருப்பதினால் ஒற்றுமையாக தோழமை உணர்வோடு எங்களது வெற்றி கூட்டணி பலத்திற்கான வெற்றியாக தான் பார்ப்போம். ராகுல் காந்தி விஜயிடம் பேசியது குறித்து கேள்விக்கு, இதனை அவரிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "நீங்க தான் அய்யா காப்பாத்தனும்..." - திடீரென துரைமுருகன் காலில் விழுந்து கதறிய பெண்ணால் பரபரப்பு... !