தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், உள்ளிட்ட சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அருப்புக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு 107 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட அரசாணை வழங்கினார்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்புக்கு குறையாத மவுசு.. இதுவரை 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்..!

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் சாதிச் சான்றிதழ் வருமானவரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என வருவாய்த்துறை ஊழியர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும் சான்றிதழ் கேட்டு இ சேவை மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற இப்படியுமா? ஸ்டாலினின் ப்ளான் இதுதான்! ஆர்.பி உதயகுமார் விளாசல்..!