திமுக அமைச்சரவையில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கும் மா.சுப்பிரமணியன், அவ்வப்போது அரசு மருத்துவமனைகளில் திடீர் சோதனை நடத்தி வருகிறார்.
ஆய்வில் ஈடுபடும்போது மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டு அறிவதோடு, சரியான நேரத்திற்கு பணிக்கு வராத மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வது மற்றும் சஸ்பெண்ட் செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், எடப்பாடி அரசு மருத்துவமனையில்மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீரென ஆய்வு செய்ததால் பரபரப்பு
இதையும் படிங்க: போட்டுக்கொடுத்து காலை வாரும் திமுக நிர்வாகிகள்! 2026-ல் வேட்பாளர் சீட் பெற நடக்கும் கூத்து!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இன்று நடைப்பெறவுள்ள நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை
அமைச்சர் மா. சுப்பிரமணியம் கலந்து கொள்ள உள்ளார்.
இதற்காக நேற்று சேலம் வந்திருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று காலை திடீரென சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்குயில் ஆய்வு செய்தார்
அப்போது மருத்துவமனைக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சரியான நேரத்திற்கு வந்துள்ளனரா? எனவும், நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது நோயாளிகள் எம்ஆர்ஐ ஸ்கேன், CT ஸ்கேன், இந்த மருத்துவ வசதிகள் வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து ஒவ்வொரு வார்டுக்கும் சென்று நோயாளிகளிடம் சிகிச்சை அளிப்பது நிறைவாக உள்ளதா மருத்துவம் பார்ப்பது சரியாக உள்ளதா என்றும் ஒவ்வொரு நோயாளிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவமனையில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் சென்று உள்கட்டமைப்புகள் சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து தலைமை மருத்துவர் கோகுலகிருஷ்ணன் மற்றும் சகா மருத்துவர்கள் செவிலியர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: சக்திவாய்ந்த மெலிசா புயலால் உருக்குலைந்த ஜமைக்கா, கியூபா..!! உதவிக்கரம் நீட்டிய இந்தியா..!!