டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அரசியல் உள்நோக்கத்தோடு தான் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக அமைச்சர் முத்துசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியில் பதிந்த வழக்குகளை வைத்து திமுக ஆட்சியில் முறைகேடு நடந்ததுபோன்று சித்தரிப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நடத்த அமலாக்கத்துறை சோதனையிலும் எந்த வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று கூறினார். ஆனால், அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை நடத்தி ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். உச்ச நீதிமன்ற விதிமுறைகளை மீறி அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் ரெய்டு! விசாகனை மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள்

எந்த ஆதாரமும் கிடைக்காததால் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என கற்பனை செய்தியை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளதாகவும், தவறான அறிக்கையை நியாயப்படுத்த அமலாகத்துறை டாஸ்மாக் நிறுவன ஊழியர்களை துன்புறுத்துவதாகவும் கூறினார். அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு அலுவலர்களுடன் அரசு துணை நிற்கும் என்றும் அமைச்சர் முத்துச்சாமி உறுதிப்பட கூறினார்.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் 2வது நாளாக தொடரும் சோதனை... சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!