மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மிக மோசமான நிலைமை அடைந்திருப்பதாக தெரிவித்தார். அதிமுகவினர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பில் இருப்பதாக தெரிவித்தார். அதிமுக சொத்துக்களை திமுகவிடம் அடகு வைக்க எடப்பாடி பழனிச்சாமி முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
முதலமைச்சரான விஜயை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவில்லை என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியின் முடிவை அதிமுக தலைமை கழகத்தில் உள்ள ஒரு செங்கல் கூட ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்தார். மேற்குவங்கம் மற்றும் ஆந்திர மாநிலங்களிலும் ஒரு யூனிட் மின்சாரத்தை 30 ரூபாய் வரை வாங்குவதாக தெரிவித்தார். முதல்வர் விஜய் திறந்து வைத்த கோவை பெரியார் அறிவுலகம் அரசு பணத்தில் கட்டப்பட்டது என்று விளக்கம் கொடுத்தார்.

கோவை பெரியார் அறிவுலகம் திமுகவினருடைய திட்டம் கிடையாது என்றும் அரசு பணத்தில் கட்டப்பட்டது எனவும் விளக்கம் கொடுத்தார். யார் திறந்து வைத்தாலும் திட்டத்தை உருவாக்குவது திமுக தான் என்று ஸ்டாலின் நேற்று பதிவிட்ட நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார். ஜாபர் சாதிக் என்ற நபர் வந்த பிறகுதான் மெத்தப்பட்டமைன் தமிழ்நாட்டில் இவ்வளவு வந்தது என்று கூறினார்.
இதையும் படிங்க: வீடியோ தெளிவா இல்லையா..? ரகுபதிக்கு எப்படி தெரியும்.? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!
போதை பொருள் விவகாரத்தில் யாராக இருந்தாலும் எந்த கட்சியினராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் திட்டமிட்டமாக கூறியுள்ளார். நாகை தமிழக வெற்றிக்கழக நிர்வாகியாக இருந்த பூபாலன் வீட்டில் 270 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தப்பட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிங்க: போதை மாஃபியாவை வச்சுக்கிட்டு ஊருக்கு உபதேசமா.? CM விஜய்யை பந்தாடிய ஸ்டாலின்..!!