திமுக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார். திமுகவின் ஒவ்வொரு நகர்வையும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணிக்காக தான் இப்படி பேசி வருவதாகவும், பாஜகவிற்கு அடிமை சேவகம் செய்கிறார் என்றும் கடுமையான குற்றச்சாட்டுகளை திமுக முன்வைத்து வருகிறது.
எஸ் ஐ ஆர் பணிகளை எடப்பாடி பழனிச்சாமி ஆதரிப்பதற்கு பாஜகவுடன் உள்ள கூட்டணி தான் காரணம் என்றும் எஸ் ஐ யாருக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்த ஒரே கட்சி அதிமுக தான் என்ற விமர்சனத்தையும் முன்வைத்து வருகின்றனர். தற்போது பொறுப்பு டிஜிபி நியமனம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து உள்ளார்.

இதனிடையே புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுத்து பேசினார். பாஜகவை காப்பாற்றுவதற்காக திமுக அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி முன் வைப்பதாக தெரிவித்தார். பாஜகவின் விசுவாசி, அடிமை என்பதை எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்துக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: தற்கொலைகளின் தலைநகரம் தமிழ்நாடு... என்னதான் நடக்குது? விளாசிய நயினார்...!
Youtube இல் வருவதை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசக்கூடாது என்றும் தெரிவித்தார். பொறுப்பு டிஜிபி நியமனம் என்பதை அறிமுகம் செய்து வைத்ததே அதிமுக அரசுதான் என்று தெரிவித்தார். பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் தெரிவித்தார். நிரந்தர டிஜிபி நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு மத்திய அரசு காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: ராகுல் - விஜய் கூட்டணி… முக்கிய தகவல் கொடுத்த தவெக நிர்மல்குமார்…!