நெல்லையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நெல்லை மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மூலம் தாமிரபரணி நதியை சுற்றுலா மூலம் 53 கோடி மதிப்பீட்டு அழகுப்படுத்தும் திட்டம் ஏற்கனவே நிதி அறிக்கையில் கூறியிருந்தோம் என தெரிவித்தார். விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. திருப்புடைமருதூர் சிவன் கோவிலை ஆன்மீக பக்தர்கள் வந்து செல்லும் வழியில் அதை டெவலப் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
மணிமுத்தாறு பகுதியில் எக்கோ பார்க் பணிகள் நடைபெற்று வருகிறது. குறுக்குத்துறை முருகன் கோவில் டெவலப்மெண்ட் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். நதிக்கரை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் வெள்ளம் வரும் சமயங்களில் அடித்துச் செல்லப்படும் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பொதுவாக நதிக்கரைகளில் உள்ள இடங்களை ஆய்வு செய்து எந்தெந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும் வேண்டுமா என்று கணக்கிடப்பட்டு வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் அந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

வெளிநாடுகளில் எல்லாம் இயற்கையாக நதிகளை உருவாக்கி அதை டூரிசம் இடமாக மாற்றி இருக்கிறார்கள் ஆனால் நமக்கு இயற்கையாகவே பல்வேறு பகுதியில் அமைந்திருக்கிறது அதை டெவலப் செய்வதற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் கூறியிருக்கிறார் அதன்படி பணிகள் மேற்கொள்ளப்படும். தீபாவளி முடிந்ததும் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து சுற்றுலா தளங்களுக்கு ஆய்வு செய்து ஆலோசனை நடத்தப்படும்.
இதையும் படிங்க: சேலம் பாலைவனமாகும்..! குப்பையிலிருந்து மின்சாரம்..!! பாமக போராடும் என சவுமியா அன்புமணி திட்டவட்டம்..!
குற்றாலத்தில் படிப்படியாக அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்றும் தமிழக வெற்றி கழகத்திற்கும் தங்கள் கட்சிக்கும் இடையில் எந்த சலசலப்பும் இல்லை எனவும் தெரிவித்தார். காமராஜர் ஆட்சியை கொண்டு வருவது தனது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ஜெயிலில் இருந்தது பெருமை.!! "ஓம்சக்தி பராசக்தி-னு ஆட்சியை கடத்த முடியாது".! நாதக கார்த்திகா திட்டவட்டம்.!!