சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கரன் மற்றும் கோவி.செழியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தொலைநோக்கு திட்டங்கள் செயலாகம் குறித்து இந்த செய்தியாளர் சந்திப்பு அமைந்தது. அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கொரோனா கால நெருக்கடிகள் நிதி நெருக்கடிகளை கடந்து மக்கள் திட்டங்கள் செயலாக்கம் செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்
இயற்கை பேரிடர்களை சிறப்பான முறையில் எதிர்கொண்டு நான்கு ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார். மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லாத சூழலிலும் பல்வேறு திட்டங்கள் நல்ல முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இயற்கை சீற்றங்களின் போதெல்லாம் மத்திய அரசின் நிதி இல்லாமலேயே திமுக அரசு தமிழகத்தை மீட்டுள்ளது எனக் கூறினார்.

உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். 3.49% ஆக இருந்த வருவாய் பற்றாக் குறை 1.17% ஆகவும் 4.91 ஆக இருந்த நிதி பற்றாக்குறை மூன்றாவது குறைந்துள்ளது என்றும் சிறப்பான நிதி மேலாண்மையால் நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள்.. தமிழக அமைச்சரவையில் முடிவு..!
தமிழகத்தில் 0.07% ஆக இருந்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 11.19% ஆக உயர்த்தி உள்ளோம் என்று கூறினார். உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி உள்ளது., 10 ஆண்டுகள் இல்லாத உச்சபட்சம் என்றும் தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,614 ஆக உயர்ந்துள்ளது எனவும் கூறினார். மேலும் தேர்வாணையங்கள் மூலம் பல்வேறு வேலை வாய்ப்புகள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 10.2 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.தமிழ்நாட்டில் புதிதாக 30 சிப்காட்டுகள், 14 நியூ டைட்டில் பார்க்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 3.28 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டு பேசினார்.
இதையும் படிங்க: வர்ற தேர்தல்ல சம்பவம் இருக்கு! நாங்க யாருன்னு பாப்பீங்க... TTV தினகரன் பரபரப்பு பிரஸ்மீட்..!