தமிழக அரசியலில் மீண்டும் ஒரு கடும் விமர்சனப் புயல் எழுந்துள்ளது. தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், அதற்கு நன்றி தெரிவித்த சீமானுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைச்சர் வன்னி அரசு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தல் முடிந்த பிறகு, அக்கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட பலர் பொய் வழக்குப் புனைந்து அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இந்தக் கைதுகளைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டனர். ஸ்டாலின், கடந்த காலங்களில் திமுக மற்றும் அதன் கொள்கைத் தலைவர்களை விமர்சித்தபோதும், பெண்களை சிறையில் அடைத்து அடக்கும் அணுகுமுறையைத் தவிர்த்து, கொள்கை அடிப்படையிலேயே பதிலளித்ததாகக் குறிப்பிட்டார்.

காவல்துறை அதிகாரிகள் ஜாமீனில் பெறக்கூடிய வழக்குகளில் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவது நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகும் என்றும் எச்சரித்தார். இந்தக் கண்டனங்களுக்கு சீமான் நன்றி தெரிவித்தார். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் வன்னியரசு விமர்சனம் செய்துள்ளார். ஆரிய கடப்பாரை கொண்டு திராவிடக் கோட்டையை இடிப்பேன் எனச் சொன்னவர் சீமான் என்றும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்ட சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "அவங்களுக்கு நாங்க இருக்கோம்"..! மறைந்த இசையமைப்பாளர் தேவா குடும்பத்தினருக்கு அமைச்சர் வன்னியரசு ஆறுதல்..!!
பெரியாரையும் கலைஞரையும் மேடைகளில் அநாகரிகமாக விமர்சித்தவர் சீமான் என்று குறிப்பிட்ட அவர், தந்தை பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்றுக் கொண்டவர்களைதான் விசிக ஏற்கும் என தெரிவித்துள்ளார். ஆனால் பார்ப்பனிய அடிமைகளை விசிக ஏற்காது என்றும் திட்டவட்டமாக கூறினார். இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை. நாதகவுக்கும் வெட்கமில்லை என்று நாதக நிர்வாகிகள் கைதுக்கு கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு சீமான் நன்றி கூறிய விவகாரத்திற்கு பதில் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மாட்டுக் கறியா.? அமைச்சரவையே பார்க்க முடியாது..! வன்னியரசுக்கு கிருஷ்ணசாமி பகிரங்க எச்சரிக்கை..!