தமிழக அரசியல் களத்தில் சிறுபான்மை என்ற சொல்லாடலை வைத்து நடத்தப்படும் அரசியலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பாணியில் மிகக்கடுமையாகச் சாடியுள்ளார். உலகெங்கும் 13 கோடி எண்ணிக்கையில் வாழும் தமிழினத்தைப் பேரினம் என்று குறிப்பிட்ட அவர், மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பவர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும் என ஆவேசமாகப் பேசினார்.
மத மாற்றத்தையும், ரத்த உறவையும் ஒப்பிட்டுப் பேசிய சீமான், திரையுலக ஜாம்பவான்களை உதாரணமாகக் காட்டிச் சரமாரி கேள்விகளை எழுப்பினார். என் அன்புச் சகோதரர் ஏ.ஆர். ரஹ்மான் இஸ்லாமியர் என்பதால் சிறுபான்மையாம், ஆனால் அவர் சொந்த அக்கா மகன் தம்பி ஜி.வி. பிரகாஷ் ஹிந்து என்பதால் பெரும்பான்மையாம்! என்னடா உங்க கோட்பாடு? தாய்மாமன் சிறுபான்மை, மருமகன் பெரும்பான்மையா? எந்தச் செருப்பை வைத்து உங்களை அடிப்பது? எனச் சீறினார். அப்பா இளையராஜா ஹிந்து, மகன் யுவன் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறார். அப்பா பெரும்பான்மை, மகன் சிறுபான்மையா? உங்களுக்கு மூளை என்று ஒன்று இருக்கிறதா இல்லையா? என வினவினார். என் தம்பி ஒரு ஹிந்துப் பெண்ணைத் திருமணம் செய்தான். தாலி கட்டும் வரை அவன் பெரும்பான்மை, தாலி கட்டிய அடுத்த நொடி அவன் சிறுபான்மையா? இந்த முட்டாள்தனத்தை எவ்வளவு காலம் நம்பப்போகிறீர்கள்? என்றார். சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் என்று கூறிக்கொள்ளும் திமுகவை நோக்கிச் சீமான் பல கேள்விகளை முன்வைத்தார்: சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு என்று சொல்லும்போதே அங்கே ஒரு அச்சுறுத்தலை உருவாக்குகிறாய். எங்களை ஒரு பாதுகாப்பற்றச் சூழலில் நீ வாழ வைத்திருக்கிறாயா? பாதுகாப்பு என்றால் வீட்டுக்கு இரண்டு வாட்ச்மேன் போடுவாயா? அல்லது ஸ்பெஷல் போஸ்ட் போடுவாயா?" என எள்ளிநகையாடினார். திமுகதான் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு என்றால், அல்லாஹ்வும் ஏசுவும் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? உலகையேப் பாதுகாக்கும் அல்லாஹ்வை விடக் கருணாநிதியும், ஸ்டாலினும், உதயநிதியும்தான் உங்களைக் காப்பாற்றப் போகிறார்களா?" என ஆவேசமாகப் பேசினார்.
நான் ஒரு போர் மறவன், வீரப் பரம்பரையில் வந்தவன். திமுகதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் கோழைகள் எனக்கு ஓட்டுப் போட வேண்டாம். நாங்கள் வீரர்கள், எங்களை நாங்களேக் காத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கும் மானத் தமிழர்கள் மட்டும் எனக்கு ஓட்டுப் போடுங்கள்" என்று முழங்கினார். மேலும், பழனி பாபா போன்ற வீரர்கள் நம்மில் தோன்றியவர்கள் என்பதை மறக்க வேண்டாம் என்றும், காலங்காலமாகப் பயம் காட்டி வாக்குகளைப் பறிக்கும் இந்த ‘அயோக்கிய’ அரசியலுக்கு மக்கள் முடிவுரை எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: "ஜனநாயகன் படத்த ஏன் இழுத்தடிக்கிறீங்க?" விஜய் பட விவகாரத்தில் சென்சார் போர்டை சாடிய சீமான்!
இதையும் படிங்க: யாருக்கும் பாதுகாப்பு இல்லை! அடையாறு படுகொலை மற்றும் நந்தனம் வன்கொடுமைக்கு தவெக தலைவர் கண்டனம்