கடுமையான சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, நூல் விலையில் நிலையற்ற தன்மை போன்ற பல காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கோவை-திருப்பூர் ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில்களுக்கு ஊக்கமளிக்காமல் மத்திய அரசிடம் திமுக அரசு கையேந்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பொறுப்பைத் தட்டிக்கழிப்பதிலும், அதை அடுத்தவர்கள் தலையில் ஏற்றி வைப்பதிலும், உலக அரசியல் தலைவர்களிலேயே முதல் இடத்தை வகிப்பவர்தான் ஏமாற்று மாடல் அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் என்பதை அவரே பல விதங்களிலும் நிரூபித்து வருவதாக விமர்சித்தார்.
அமெரிக்க அரசு தற்போது உயர்த்தியுள்ள இறக்குமதி வரியால் பாதிப்படைந்துள்ள திருப்பூர் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்கு, மு.க. ஸ்டாலின் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன., 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்றுவரை, இவர் ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில்களுக்கு ஏற்படுத்திய இடையூறுகள், பிரச்சனைகள் ஏராளம் என்றும் அதனால், அந்தத் தொழில்கள் ஏற்கெனவே நலிவடைந்துள்ளது என்பதே உண்மை எனவும் சுட்டிக்காட்டினார்.

திமுக ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் ஆட்சியில், மின் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாலும், கழிவு பஞ்சில் இருந்து தயாரிக்கப்படும் நூலிழைகளைப் பயன்படுத்தி காடா துணி, கலர் நூல்களில் போர்வை, மெத்தை விரிப்பு, லுங்கி, துண்டு, கால்மிதி உட்பட பல துணி வகைகளை தயாரிக்கப் பயன்படுத்தும் நூல்களை உற்பத்தி செய்யும் ஒப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள், உற்பத்தி நிறுத்தப் போராட்டங்களை நடத்தியதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: “விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” - தவெகவை நோஸ்கட் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
அமெரிக்காவின் தற்போதைய கூடுதல் வரி விதிப்பால், நம் நாட்டில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பிரதமர் மோடிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்மையில் நான் கடிதம் எழுதி உள்ளதாகவும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், தொழில் துறைக்கு நிவாரணம் அளிக்க -கடன் மற்றும் அதற்கான வட்டியினை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கவும் மற்றும் வட்டியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்து, தொழிலாளர்கள் வேலை இழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: மனசாட்சி இல்லையா? அஸ்தியை கரைக்குற மாதிரி மனுக்கள் கொட்டி இருக்கீங்க! இபிஎஸ் கண்டனம்..!