சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து மழை அதிக அளவு பெய்த மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, மழை நீரை அகற்றுவது, அடிப்படை வசதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசித்தார். அப்போது மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். தற்காலிக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நிவாரண முகாம்களில் அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மழைநீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மழை தீவிரம் அதிகமா இருக்கு… போர்கால நடவடிக்கை எடுங்க… EPS வார்னிங்…!
நாகை, திருவாரூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்துள்ளார். கண்காணிப்பு அதிகாரிகள் உடனடியாக 12 மாவட்டங்களுக்கும் சென்று உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சூறையாடும் மழை... முகாம்களை தயார் செய்யுங்க... முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...!