தென்காசி மாவட்டம் அனந்தபுரம் அரசு நிகழ்ச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது, தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார். புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளீட்டு அதிகாரிகளுக்கு 11 புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார். தென்காசி மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு 6 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

சிவகிரி, கடையநல்லூர், சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டங்களில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் கண்மாய்கள் 12 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். தென்காசி வட்டம் சிவசைலம் கிராமத்தில் உள்ள கடனா ஆணை நான்கு கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், கடையநல்லூர் வட்டத்தில் உள்ள அணைக்கட்டுகள் மற்றும் குளங்கள் நான்கு கோடி செலவில் சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2,074 கோடி ரூபாயில் திட்டப் பணிகள்... தென்காசியின் வளர்ச்சி மலைக்க வைக்கிறது! முதல்வர் பெருமிதம்...!
செங்கோட்டை வட்டத்தில் அடைவி நயினார் அணை திட்டத்தின் கீழ் உள்ள கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்டவை ஐந்து கோடி செலவில் சீரமைக்கப்படும் என்றும் கூறினார். மேலும், ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு ஒரு கோடி செலவில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்... சிபிஐ விசாரணை கோரும் நயினார்...!