வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

எல்லாம் மகளிருக்காக தான்… ரூ.40 கோடியில் நடமாடும் மருத்துவ ஊர்திகள்… நேரில் பார்வையிட்ட முதல்வர்…!

மகளிருக்காக உருவாக்கப்பட்ட நடமாடும் மருத்துவ ஊர்திகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடமாடும் மருத்துவ ஊர்திகள் சேவையைக் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 40 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புற்றுநோய் தடுப்பு பராமரிப்பு திட்டத்தில் நடமாடும் மருத்துவ ஊர்திகள் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் நலனுக்காக 40 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். டிஜிட்டல் மேம்மோகிராபி, இசிஜி, செமி ஆட்டோ அனலைசர் ஒரு லிட்டர் பல வசதிகளுடன் நடமாடும் மருத்துவ ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்திகலை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து திருப்பத்தூர், நாமக்கல், மயிலாடுதுறை உள்ளிட்ட 12 இடங்களில் 62 கோடி ரூபாயில் தோழி விடுதிகள் அமைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும், விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், குமரி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் தோழி விடுதிகள் அமைய உள்ளன.

இதையும் படிங்க: எல்லோர் மனசுலையும் தாமரை மலரனும்… என்னயா நடக்குது? கோவில் குருக்கள் பேச்சுக்கு கண்டனம்…!

முக்கிய நகரங்களில் பணியாற்றும் மகளிர் பயன்பெறும் வகையில் 12 இடங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்படுகிறது. தொடர்ந்து திருச்சி மற்றும் கோவையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லங்களுக்கு 27.90 கோடி ரூபாயில் புதிய கட்டடங்கள் கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் சென்னை ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் SIR பணிகள்… தேர்தல் ஆணையத்தின் புதிய அப்டேட்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी