வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இதனை உறுதிப்படுத்தினார். பீகாரைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி கேரளா, மேற்கு வங்கம், குஜராத், சத்தீஸ்கர், கோவா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இன்று முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: "கொத்து, கொத்தாக நீக்கப்படலாம்"... திமுகவினரை எச்சரித்த அமைச்சர் ஐ.பெரியசாமி...!
51 கோடி வாக்காளர்களை சரிபார்க்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 27ஆம் தேதி வரை 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அதில் 5 கோடி (78.09%) வாக்காளர்களுக்கு சிறப்பு தீவிர திருத்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் 68,467 BLO அதிகாரிகளும், 2.11 லட்சம் பூத் லெவல் ஏஜெண்டுகளும் SIR பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: SIR பணிகளை உன்னிப்பா கவனிக்கணும்... எதுவும் மிஸ் ஆகக்கூடாது... கழக நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை...!