அமெரிக்கா, ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு 30 நாட்கள் மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. இது ஒரு முடிவு செய்து தடை விதிப்பது போன்று அல்லாமல், தற்காலிக விலக்கு அளிப்பதாகும். மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போர் மற்றும் பதட்டங்கள் உள்ளன. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்வது கிட்டத்தட்ட நின்றுவிட்டது.
இது உலக அளவில் எண்ணெய் விநியோகத்தை பெரிதும் பாதித்துள்ளது. பெர்சியன் வளைகுடாவிலிருந்து வரும் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 40% இந்தியாவுக்கு வருவது இந்த வழித்தடம் வழியாகத்தான். இதனால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டு, விலைகள் உயர்ந்து, சப்ளை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ரஷ்யாவிலிருந்து 30 நாட்களுக்கு மட்டுமே இந்தியா எண்ணெய் வாங்க அமெரிக்கா முடிவு செய்யும்போது, அது ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது சொந்த எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை என்று கேள்வியை எழுப்புவதாக தெரிவித்தார். விசாகப்பட்டினத்தில் இந்தியா நடத்திய சர்வதேச கடற்படை மதிப்பாய்வு 2026 கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற உடனேயே, ஆயுதம் ஏந்தாத ஈரானிய போர்க்கப்பலான IRIS தேனாவை அமெரிக்கா மூழ்கடித்ததும் சமமாக கவலையளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்" ..? சீரியல் முடிஞ்சுது..!! தமிழிசை தாக்கு..!!
பன்னாட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு வந்த ஒரு கப்பல் அத்தகைய விதியை சந்திக்கும் போது, இந்தியா அமைதியாகவோ அல்லது செயலற்றதாகவோ தோன்ற முடியாது. இந்தியாவின் நீண்டகால மூலோபாய சுயாட்சி மற்றும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையின் பாரம்பரியத்தில் மத்திய பாஜக அரசு முற்றிலும் சமரசம் செய்ததாகத் தெரிகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சர்வதேச அரங்கில் இந்தியாவின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மேலும் நாட்டின் இறையாண்மை மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 2030- க்குள் 7 லட்சம் வீடுகள்… நான் முதல்வன் 2.0..!! 14 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!!